Monday, April 19, 2010

கவிதை 1 - என் மீது நீ வந்தே


என் மீது நீ வந்தே சாய்ந்தாடம்மா

ஏழுஸ்வரங்களில் நான் பாடவே

முந்நூறு நாள் சுமந்த முத்து மணியே – என்

மனம் நிறைந்த வண்ண முழு நிலவே

என் மீது........


1

ஆராரோ நான் பாட வாளர்ந்தாயம்மா

என் - ஆருயிராகவே ஆனாயம்மா

தீராத ஆசையே தேனூற்றாகியே – அது

தெவிட்டா இன்ப புது பாட்டாகவே


மடி மீதே உனை வைத்து தாலாட்டவே – என்

மகிழ்விற்கே மகிழ்வாக ஆனாயம்மா – நான்

படிக்கின்ற பாடலே பல மாதிரி – அதை

படிப்பேனே உனக்காக புது மாதிரி

என் மீது .........


11

நிலவோடு வான் மேகம் கதை பேசவே – அது

நில்லாமல் ஓடவே கலைத்தோடியே – ஏ

நிலவே நீ நலமா? என்றே கேட்கவே - இந்

நிகழ்வாலே என் சங்கீதம் உருவாகவே


தாலாட்டி சீராட்டி நான் பாடியே – உன்

தலைவாரிப் பூச் சூட்டி ஆளாக்கியே

நிலாக்காட்டி மகிழ்ந்தாட சோறூட்டியே

நீயே என் தோள் மீது சாய்ந்தாடவே

என் மீது...........


No comments:

Post a Comment