Monday, April 19, 2010

கவிதை 2 - நல்லூர்க்கந்தா....



நல்லூர்க் கந்தா உனக்கு காவடிய நானும் எடுக்கிறேன் நல்ல (F) பிகரு என்னக் காதலிக்க கருணை காட்டைய்யா..........
ஒருத்திய சொல்லாமல் நான் காதலித்தே சிக்சேற் கொடுத்தேனே அவள் என்னை சார்ளிச் சப்பிளின் ஆக்க காதல் சப்ஜெற் விழங்கல......
நல்லூர்க் கந்தா

நான் யாரை நம்புவேன் நான் யாரை நம்புவேன் என் நல்லூர் முருகையா எனக்கே நீதான் துணை ஐயா.....
நல்லூர்க் கந்தா

1
சிங்காரியா சின்னப் பொண்ணா எனக்கு வேணுமே.......
நல்ல – சீதனத்த பெருஞ் சுமையா கொண்டு வரனுமே ....
அவ(ள்) அங்கமெல்லாம் தங்கத்தாலே நிறைய வேணுமே.....
அவ(ள்) ஜஸ்வரியா ராயை மிஞ்சும் பேரழகியாகவே....

என் மம்மி சொல்லுக்கு அடங்கி நல்லா என்றும் நடக்கணும்...
என்-மாற்றான் மனைவி கண்டிவள கசங்கி போகணும்...
நிம்மி என்றே சிங்கிள் பெயரை கொண்டே இருக்கணும்..
அவ- நெருங்கி என்கிட்ட வந்தே நொறுங்கிப் போகணும்...
நல்லூர்க் கந்தா

2
நல்ல – கன்னியரே கனடா சுவிசை விரும்பிச் செல்லவே...
நானோ காவியணிந்த துறவியாகக் கனவு காணவே....
என் எண்ண மெல்லாம் இலவம் பஞ்சாய் பறந்தே போகவே...
இன்று என் அழகில் என்ன குறை இருக்கோ தெரியல...

ஐயா நீ செய்த திரு விளையாடல் பலதிலே
அதில் ஒன்றைக் கூட நானென்றும் செய்தறியேனே...
தெய்வயானை வள்ளியை நீ எப்படி மணந்தாய்...
அந்த – தந்திரோபாய பார் முலாவை எனக்கு மட்டும் அருள்வாய்
நல்லூர்க் கந்தா

No comments:

Post a Comment