
கொட்டிலுக்குள்ள கும்மாளந் தான் போட்டுக்கலாமா?
குடி குடியக் கெடுக்கிறத மறந்திடலாமா? நீங்க..
கட்டிய பெண்சாதி பிள்ளை கலங்கிடலாமா....? – நாளை
காலன் உங்கள வதைத்திடவே வருந்திடலாமா?
கொட்டிலுக்குள்ள
1
பிறண்டி> விஸ்கி என்றே பல பெயர்களைக் கொண்டே – கொடும்
பாதகச் செயல் செய்திடவே பக்கத் துணை யானதே..
கறள் பிடிக்க வைத்து உடம்பை பல காயங்கள் செய்தே..
காறி உமிழும் நீரினிலே இரத்தங் கசியவே.
ஈரல்> இதயம்> கிட்னி> மற்றும் உறுப்புகளை எல்லாம் - தன்
இரையாக்கிக் கொண்டே எம் இன்னுயிரை வதைக்கவே.
வேரறுந்த மரமாய் ஒர் நாளில் வீழவே .. – நல்
வாழ்விழந்தே இவ்வுலகை விட்டே மாண்டு போகவே - இன்;றே...
கொட்டிலுக்குள்ள
2
முட்டி தட்டிப் பாட்டுப் பாடும் வேளையில் நீங்க
முயன்றால் முடியாத தென்று எதுவுமே இல்லை – நீங்க
காட்டும் வழி நல்வழியாய் இருக்க வேண்டுமே – என்றும்
கலங்கரையாய் எம்மவர்க்கே நீர் திகழ வேண்டுமே.....
வெட்டிக் கதை பேசியே வீண் வம்பளக்கவே ..... பிறர்
வெறிகாறன் பேச்சென்றே வெறுவாயே சப்பவே ..- நீங்க
கட்டும் வேட்டி இல்லாமலே தெருக் கானில் கிடக்கவே – அங்கே
காலைத் தூக்கி நாய் உன் முகத்தில் பூ மாரி பொழியவே...
இன்றே
.
கொட்டிலுக்குள்ள
No comments:
Post a Comment