Thursday, April 22, 2010

இரகசியமாய்...


'ஓம் கணானாந் துவா கணபதி நம் அவா மகே கவிங் கவி நாம் ஏக ராஜம் பிர்மணாம்'. என மணியைக் கிலுக்கிக் கொண்டே மந்திரத்தைச் சொல்லத் தொடங்கியவர் சிவப்பு> மஞ்சள்> செம்மஞ்சள்> வெள்ளை என ஒன்றாய் சேர்ந்து கலந்திருந்த பல வர்ணப் பூக்களை தட்டில் இருந்து அள்ளி எடுத்தவர் முதலிலே பிள்ளையாரை மனதிலே தியானித்துக் கொண்டு பிள்ளையார் பூசையைத் தொடங்கியவர்>


அடுத்தடுத்து தான் செய்ய வேண்டியதை விதி முறையாகச் செய்து கொண்டே தன் அருகில் இருந்த திருநீற்றுத் தட்டை எடுத்து பக்கத்தில் அமர்ந்திருந்த பட்டு வேட்டிச் சட்டைக்காரர் இருவரிடமும் திரு நீறைக் கொடுத்து பூசிக் கொள்ளுங்கோ என்றவர்> அடுத்ததாக தீர்த்தத்தை எடுத்து அவர்களுக்கு குடிக்கக் கொடுத்துக் கொண்டே பின்பு ஒரு டம்ளரில் நிரம்பியிருந்த பச்சைத் தண்ணீரை எடுத்து அவர்களது கையில் இட்டு அலசிக் கொள்ளுங்கோ எனச் சொல்லிக் கொண்டவர் உடனே


அங்கே சற்றுத் தூரத்தில் அவர் எதிரே நின்ற சிலரை அழைத்து அவர்களுக்கும் திருநீறையும்> தீர்த்தத்தையும் கொடுத்தவர்> அந்தத் தட்டில் நிறைந்திருந்த அந்தப் பல வர்ணப் பூக்களை எடுத்து அந்தச் சுமங்கலிகளின் கைகளில் கொடுத்துக் கொண்டே நீங்கள் போய் இனி பொம்பிளையை அழைச்சுக் கொண்டு வாங்கோ என அந்தக் குருக்கள் அவர்களுக்கு சொன்னது என் காதில் மெதுவாகக் கேட்கவே தொடர்ந்து நடக்கப் போவதை பார்க்க ஆவலாய் இருந்த வேளையில் அந்த மணவறை மேடையை விட்டு கீழே இறந்கி வந்த அந்தச் சுமங்களிகள் என்னை விலத்திச் சென்று கொண்டிருக்க நான் அவர்களைப் பார்த்து ரசித்த படியே அந்தக் கல்யாண மண்டபத்தின் அழகையும்> அங்கே வரையப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் ஆங்காங்கே இருந்த சிற்பங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளையிலே....


அந்தக் கலைஞர்களின் கை வண்ணங்களைக் கண்டு பிரமித்துப் போனதோடு இவர்களுக்கு (கலைஞர்களுக்கு) எப்படித்தான் இப்படியான கற்பனைகள் உருவாகிறதோ! என வியந்து கொண்டிருந்த என் மனதிற்கு இவையெல்லாம் கடவுளால் கொடுக்கப்படுகின்ற ஓர் வரம் என்று தான் சொல்ல வேண்டும். என என் ஆழ் மனம் எனக்குள்ளே சொல்லிக் கொண்டிருக்கவே


அந்தக் கல்யாண மண்டபம் அங்கு வந்திருந்தவர்களால் இடைவெளி இல்லாது நிறைந்திருந்தது. அதில் ஆண்களும்> பெண்களும்

>

குழந்தையும்

>

குமரியுமாக அங்கே நிறைந்திருந்தவர்களில் பொதுவாக காட்சிப் பொருளாக பெண்களே ஆண்களை விஞ்சி அதில் முதல் இடம் பிடித்திருந்தார்கள். அந்த இடத்தில்.

அந்தப் பெண்கள் தலை முதல் கால் வரை என்ன என்ன எல்லாம் அழகென்று செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அழகென்று கருதித் தங்களை ஜஸ்வர்யா ராயாய் (உலக அழகி) நினைத்து தங்களை அழகு படுத்தியிருந்தவர்களில் பலர் அழகிழந்து அலங்கோலமாய்த் தெரிந்ததோடு சிலர் அழகாகவும் இருந்தார்கள்.

அவர்கள் உதட்டிற்கு பூசியிருந்த சாயத்தாலும் கண்ணோரமாய் பூசியிருந்த கண்மையாலும் இயல்பான தங்களின் அழகை இழந்து விழி பிதுங்கி

>

உதடு பிளந்து வில்லங்கப் பட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் எறி தாவணியைக் மிகவும் கஸ்ரப் பட்டுக் கொண்டே கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் நடுவே

>

எந்தவொரு வில்லங்கமும் இல்லாமல் அளவுக்கு மிஞ்சிய ஆடம்பர அலங்காரங்களைத் தவிர்த்து தன் இயல்பான அழகோடு தன்னை எளிமையாய் அழகுபடுத்தியிருந்தவள் தன் தோழிகளுக்கு நடுவே நிற்கவே அவளை நான் உற்றுப் பார்த்த அந்த வேளையில் அவளும் என்னை எதிர்த்து தன் விழிக் கணையால் என்னை அவள் தாக்கிய அந்த நேரம்

>

'கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே.... எனக்கா' என்ற அந்தப் பாடல் நாதஸ்வர ஓசையிலே கலந்து வந்து என்னை மெய் மறக்கச் செய்தது. அந்த நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையை விட்டு விலத்த மனமின்றி மிகவும் கஸ்ரப்பட்டுக் கொண்டே எனது பார்வையை அவளில் இருந்து விலத்தி அந்த நாதஸ்வர வித்துவானை நோக்கிப் பார்க்க அவர் எனக்கு நல்ல பழக்கமானவராக இருந்ததால் அவர் இருந்தபடியே அசைந்தாடிக் கொண்டே நாதஸ்வரத்தை ஊதியவர் என்னைக் கடைக் கண்ணால் பார்த்து மெதுவாகச் சிரித்த படியே தலையை அசைத்து சரியா என தன் ஜாடையாலே என்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே அந்தப் பாட்டை தொடர்ந்து ஊதியவர் என்னையும் பார்த்து என் எதிர்த் திசையில் நின்று என்னை நோக்கியவளையும் பார்த்துச் சிரித்து

>

>

சிரித்து கொண்டே அந்தப் பாட்டை மிகவும் அழகாக ஊதிக் கொண்டிருந்தவர்

>

திடீரென ஸ்வரத்தை மாற்றி 'வாராய் என் தோழி வாறாயோ மணப் பந்தல் காண வாராயோ 'என்ற பாடலை ஊத அங்கே திரண்டிருந்தவர்களின் நடுவால் மணப் பெண்ணை தோழியர்கள் அழைத்து வந்தார்கள்.

அங்கே அழைத்து வந்த அந்த மணப் பெண்ணில் பொன்னும்

>

மணியும் மின்ன அவளின் வண்ண முகம் வடிவாக தெரியாது இருக்கவே தலை குனிந்த படியே வந்து கொண்டிருந்தவளை என்னருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து எப்படி பொம்பிள? எனக் கேட்டவருக்கு மற்றவர் அசல் பொம்பிள என கண்ணிமையை உயர்த்திக் காட்டிக் கொண்டே...

>

ஆனா மாப்பிள பெடியன் தான் பொம்பிளய விட கொஞ்சம் பதிவா (கட்டையா) இருப்பான் போல தெரியுது

>

என்றவரைப் பார்த்து இஞ்ச என்னைப்பார் நல்ல தம்பி அண்ண என்றபடியே மற்றவர் இப்ப உந்த பதிவு

>

உயரம்

>

கறுப்பு

>

சிவப்பு எல்லாம் பாத்து களியாணம் செய்ய வெளிக்கிட்டா ஒரு கலியாணமும் லேசில நடக்காது அதோட என்ர பிழைப்பும் கெட்டுது எனச் சொல்லிக் கொண்டே நல்ல தம்பி அண்ண நான் ஒண்டு சொல்லுறன் கேக்கிறிய என்றவர்

>

இன்டைக்கு மனப் பொருத்தம் என்டு ஒன்டு சரியா இருந்தா மற்றதெல்லாம் தேவையே இல்லை. இதுதான் என்ற கொள்கை. எனச் சொன்னவர் இந்தக் கலியாணத்தை ஒப்பேற்றினதே நான் தான். நடந்த கதையைக் கேட்டியண்டா சிரிப்பாய் அண்ண என்றவர் தன் கடவாயால் வழிந்த வெற்றிலைச் சாறை கையால் துடைத்துக் கொண்டே

வடிவாக் கேள் அண்ண என அவரைப் பார்த்து அன்டைக்கு உவன் மாப்பிள்ள பெடியன்ர குறிப்ப இப்ப ஒரு மாதத்துக்கு முதல் என்னோட சேர்ந்து ஓடுற அச்சுவேலிப் புறோக்கன் அவன் குணம் கொண்டு வந்து தந்து சொன்னான். உடன இதுக்கு ஒண்டு போட்டு (பொருத்தம்) பாருங்கோ என்டான்.

உடன அண்டைக்கே யோசிச்சுப் பாத்தன் இது தான் நல்ல சந்தர்ப்பம். இத விட்டா பிறகு இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் இனி கிடைக்கவே கிடைக்காது என நினைச்சுக் கொண்டே பொம்பிள வீட்ட உடன போனன் என்னைக் கண்டவுடன் சோதியற்ற மனுசி இருந்த இடத்த விட்டிட்டு மெதுவா எழும்பி அங்கால வெளியால போக

>

சோதியர் தான் என்னக் கண்டிட்டு ஆ! கதிரவேலு வா வா என்டு கூப்பிட நானும் ஓண்டுமே கதைக்காம அவரடியில போய் பேசாம இருந்தன். கொஞ்ச நேரத்தால நான் தான் வலிய மெல்லமா என்னண்டா சோதியண்ண...... என்டு இழுத்தபடி மெல்லமா துவங்க உடன அந்தாள் (சோதியர்) நடந்ததெல்லாத்தையும் இனியும் கதைச்சுக் கொண்டிருக்காம இனி அதுக்கு என்ன செய்யலாம்

>

என்டு மட்டும் நீ எனக்கு சொன்னாக் காணும் கதிரவேலு என்டு என்னப் பாத்துக் சொன்ன சோதியரிட்ட மெல்லமா உந்த மாப்பிளேண்ட குறிப்பக் குடுத்து உடன பொருத்தம் பாத்து நாளைக்கே உங்கட முடிவு வடிவா எனக்கு சொல்லுங்கோ

>

பிறகு மற்ற விஷயங்களைப் பற்றிக் கதைப்பம். என்டிட்டு நான் விட்டிட்டு வந்திட்டன்.

எனச் சொல்லிக் கொண்டிருந்த கதிரவேலன்ட கதையக் கேட்டுக் கொண்டிருந்த நல்லதம்பி ஆ... ஆ.... உதப் பற்றிப் பிறகும் கதைக்கலாம் இத விட்டா பிறகு இது கிடைக்காது எனச் சொன்னவருக்கு முன்னே குனிந்த படி இரு கைகளாலும் அந்தத் தட்டைத் தாங்கி நீட்டிய படி அவர் சொன்னதைக் கேட்டு மெதுவாய் சிரித்துக் கொண்டே நின்றவளைக் கண்டு திகைத்துக் கொண்டே நானும் அவர்களில் ஒருவனாய் அந்தச் சில்வர் தட்டிலிருந்த ஜஸ் சர்பத்தை எடுத்துக் கொள்ளவே அவள் முதல் அங்கே நின்று எப்படி என்னைப் பார்த்தாளோ அந்தப் பார்வையின் இரு மடங்கால் என்னை இப்போது பார்த்துக் கொண்டே அவள் அவ்விடத்தை விட்டு விலத்த என்னருகில் இருந்த இரண்டு அறளைகளும் என்னையும்

>

அவளையும் மாறி

>

மாறிப் பார்த்துக் கொண்டிருந்ததை என் கடைக் கண்ணால் பார்த்த வேளையிலே

>அதிலிருந்த

நல்ல தம்பி என்னை மெதுவாகத் திரும்பிப் பார்த்து தம்பி! நீர் இந்த இடமா? என கேட்டவருக்கு நான் இல்லை என பதில் சொல்லிக் கொண்டே அவர் அருகில் இருந்த கதிரவேலைப் பார்க்க அவன் தலையைக் குனிந்த படியே தன் வெத்திலைப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்து அதை வடிவாக பார்த்துக் கொண்டே அதற்கு சுண்ணாம்பைத் தடவிக் கொண்டிருக்க

>

அவனை பார்த்த நல்ல தம்பியார் எடேய் கதிரவேலு இந்தாடா இத அங்கால வையடா என தான் குடித்து முடித்த சர்பத் ரம்ளரை அவனிடம் நீட்ட கதிரவேலன் அந்த ரம்ளரை வாங்கி அதை ஒரு பக்கமாக வைத்தவன்> மெதுவாக

மேல் கண்ணால் என்னை அவன் பார்க்க நானும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பழையபடி தலையைக் குனிந்தவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே..! என என்னை வருத்தி அவனை நினைவு படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த வேளையிலே...

>

அங்கே பேரோசையாய் இடி முழங்கிய அந்த கெட்டிமேள ஓசையால் அந்த அழகான மணவறையைப் பார்க்க. அங்கே மணமகன் மணமகள் கழுத்திலே தாலியைப் பிடித்தபடி கமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நிற்க

>

அங்கே சுற்றி நின்றவர்கள் பூக்களை அள்ளிச் சொரிந்து வாழ்த்திக் கொண்டிருக்க> அந்த

மணவறையின் பின்னால் நின்ற தோழிப்பெண்கள் அந்த தாலிச் சுரையை பூட்டிக் கொண்டிருந்ததைக் கண்ட வேளையிலே.....

அப்ப அந்த 3 முடிச்சு போடுறதெல்லாம் இப்ப என்ன மாதிரி என என் மனம் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளவே... அதற்குப் பதில் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் என் காதில் அந்தக் குரல் கேட்டு அவர்களை திரும்பி பார்க்காமலே என் கவனத்தை 100 tPjk; ஆக்கிக் கொண்டே அவர்கள் கதைப்பதை மிகக் கவனமாக கேட்கவே.


டேய் மெல்லமா கதையடா கதிரவேலு உந்த விஷயங்களை எல்லாம் மெல்லமா கதைக்கப்பழக வேணுமடா

>

என்ற நல்ல தம்பியருக்கு ஓமண்ண

>

ஓமண்ண நீங்கள் சொல்லுறதும் சரிதான் எனச் சொன்ன கதிரவேலன் தன் சத்தத்தைக் குறைத்து நல்ல தம்பியண்ணை உவர் சோதியர் உதுகளில வலு கெட்டிக்காரர் உங்களுக்கு தெரியும் தான என தான் விட்ட இடத்தில் இருந்து தொடங்க அதற்கு நல்ல தம்பியரும் ம்... ம்... தெரியும்... தெரியும்... பிறகு என்ன நடந்ததென்டு சொல்லன் என்றவருக்கு கதிரவேலன்

>

ஆ. அதுக்குப் பிறகு உவர் சோதியர் உந்த பொம்பிளேண்ட தேப்பனுக்கு கள்ளுத் தண்ணிய கிடாரக் கணக்கில வாங்கிக் குடுத்து குடுத்து அவன ஒரு மாதிரி மடக்கி பெட்டேன்ர பிரச்சினையப் பற்றி கதைக்காமல் பண்ணிப் போட்டான்

>

பிறகு உவள் பெட்டேன்ர (பொம்பிளேன்ட) தாயும் வருத்தக்காரியா கிடந்ததோட அவளுக்கு உவள் பெட்டேன்ர பிரச்சினையையும் தெரியவர அவள் தாயும் அடுத்த அடுத்த மாதமளவில செத்துப் போனாள்.


பிறகென்ன அவன் தேப்பனும் கள்ளுத்தண்ணி கண்ட இடமெல்லாம் சொர்க்கம் என்டு கிடந்து கிடந்து அவனும் சாக இவள் பெட்ட பாவம் பிறகு தனி ஆளாப் போனாள்.


அப்ப தான் சோதியர் வீட்ட உவள் பெட்டைய (பொம்பிளய) நான் தனியக்கண்டு மெல்லமா சொன்னன். எடி பிள்ள நீ ஏமாந்து போனது இந்த வீட்டுக் காரருக்கும் எனக்கும் தான் தெரியும் அதோட உவங்களைப் பற்றி முதலே அண்டைக்கு உனக்கு நான் சொன்னனான் தான> நீதான் நான் சொன்னதைக் கேக்காம அவனோட சேந்து பழகினா> அவனோட நீ சேந்து பழகினதுக்குப் பரிசா அவன் இன்டைக்கு உனக்கு தந்தது பெரும் சுமையா இருக்கிறது உனக்கு விளங்குத

பிள்ள உன்ர உந்தச் சுமைய இன்டைக்கே நீ இல்லாம அழிச்சுப் போடு பிறகு உன்ர வாழ்க்கை தான் அநியாயமா போய்விடும். என ஒரு மாதிரிச் சொல்லி அவளைக் கொண்டே அதை எல்லாத்தையும் செய்விச்சுப் போட்டு சோதியரிட்ட போய்ச் சொன்னன் குறிப்பு நல்ல பொருத்தமா இருக்கு மாப்பிள்ள பொடியனுக்கும் பொம்பிளய நல்லா பிடிச்சிருக்கு வெறும் 40 லட்சத்தோட இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம். என்ன மாதிரி என்டு கேட்டன்.


உடன சோதியர் தன்ர கௌரவத்துக்குப் பயந்து> நான் சொன்னதுக்கு சம்மதிச்சு 40 லட்சத்த தந்த சோதியரைக் கொண்டே அவேன்ட (மாப்பிள வீட்டுக்காரரின்ட) 30 லட்சத்தையும் குடுத்திட்டு என்ற கூலிக்காசான (புறோக்கர் காசு) 10 லட்சத்தையும் நானும் எடுத்துக் கொண்டு அந்தப் பிரச்சினைக்கு இன்டைக்கே முற்றுப் புள்ளி வைச்ச மாதிரி இந்தக் கலியாணத்தையும் ஒரு மாதிரி முடிச்சுப் போட்டன்.


இத விட என்ன நல்ல காரியத்தை நான் இனி செய்யப் போறன். ஆ..... அங்க பார் நல்ல தம்பியண்ண அதில நின்டு அறுகரிசி போடுறான் அவன் தான் சோதியரின்ட ஒரே ஒரு பொடியன் அவன்ட மனுசிக்காரிதான் அவனுக்குப் பக்கத்தில நின்டு அறுகரிசி போடுறவள்.


அந்தக் கலியாணத்தையும் நான் தான் செய்து வைச்சனான். அதிலயும் எனக்கு சொஞ்சம் (வெளிச்சுது) கிடைச்சுது.

நல்ல தம்பியண்ண உனக்கொரு பகிடி சொல்லுறன்

கேக்கிறிய என்றபடியே உவன் சோதியற்ற உந்தப் பெடியன் தான் இப்ப கலியாணம் நடக்கிற உந்தப் பெட்டைய முதல் ஏமாத்தினவன். எனச் சொல்லிக் கொண்டிருந்த கதிரவேலனை ஞாபகம் வந்து நான் அவனைத் திரும்பிப் பார்க்கவே என்னை அவன் யார் என அறிந்து கொண்டே மெதுவாக அவ்விடத்தை விட்டு எழும்பி அதில் நின்றவர்களை விலத்திக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றவனைப் பின் தொடர்ந்து நான் கலைத்துச் செல்லவே....

அவனைத் தேடி அங்கு வந்த வேறு சிலர் அவனை அவ்விடத்தில் கண்டு அவனைச் சுற்றி மடக்கிப் பிடித்து தாங்கள் வந்த வாகனத்தில் (வானில்) தள்ளி விழுத்தி ஏற்றிக் கொண்டிருந்ததை இரகசியமாய்க் கண்ட சோதிவாணவனும் (சோதியரும்) அவனது மகனும் யாரும் காணாதிருக்கவே அந்த கல்யாண மண்டபத்தை விட்டு பின் வாசல் வழியால் வெளியேறிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டே இரகசியமாய் அவர்களைப் பின் தொடர நினைத்த வேளையிலே யாரும் எதிர் பாராதிருக்கவே கதிரவேலனை ஏற்றிச் சென்ற அந்த வாகனம் திடீரென அவர்களுக்குப் பக்கத்தில் வந்து நிற்க... தங்களின் கௌரவத்திற்கு எந்தவொரு வில்லங்கம் ஏற்படாத வகையில் சோதியரும்> மகனும் தங்களை ஏதே ஒரு விருந்துபசாரத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் வந்திருக்கிறார்கள் என அதில் நின்றவர்களுக்கு சிரித்தபடி முக பாவனை காட்டிக் கொண்டே அந்த வாகனத்தில் இருவரும் ஏறியதும் தான் தாமதம் அந்த வாகனம் எந்த வழியால் சென்றது எனத் தெரியாமல் சீறிப் பாய்ந்து கொண்டே அது எங்கோ சென்று மறைந்தது.


No comments:

Post a Comment